சுந்தரமூர்த்தி சிவாச்சார்யர்

 

காலஞ்சென்ற துரைச்சாமிக் குருக்களது இளைய மகன் சுந்தரமூர்த்தி சிவாச்சார்யர் (B.A.) நேற்று (03.12.2009) வியாழக் கிழமை கொழும்பில் சிவபதமடைந்துவிட்டார். அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (04.12.2009) வெள்ளிக்கிழமை கொழும்பி லேயே நடைபெற ஒழுங்குகள் செய்யப்படுகின்றன.
அன்னார் ஜெயலக்ஷ்மியின் கணவரும், விசாலாட்சி (ஆசிரியர், கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரி), வாகீஸ் வரி (ஜேர்மனி), தர்மாவதி (ஆசிரியை, யாழ் மத்திய கல்லூரி), தேவேஸ்வரி (ஆசிரியை, மல்லாகம் மகாவித்தியாலயம் மலேசியா), கீதாஞ்சலி (இந்தியா), துரைச்சாமிசர்மா (வைத் தியர், கொழும்பு) ஆகியோரது தந்தையும், பொலிகண்டி தியாக ராசாக் குருக்கள் தம்பதிகளின் மருமகனுமாவார். அன்னார் மகா ஜனாக் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி ஆகியவற்றில் உப அதி பராகவும் பணியாற்றியவர்.
அன்னாரது பூதவுடல் கொழும்பு சப்பறீம் மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காகச் சேர்க்கப்பட்டு இன்று (04.12.2009) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயா னத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: கு. நகுலேஸ்வரக் குருக்கள் (கீரிமலை)
சு.து. ஷண்முகநாதக் குருக்கள் (மாவை)
சகோதர, சகோதரிகள்.
 

 

May his soul rest in peace!

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org